Sri Lanka News

கட்டுநாயக்க – மினுவாங்கொட வீதி முற்றாக முடக்கம்

மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சூழ்நிலையால் கட்டுநாயக்க – மினுவாங்கொட பிரதான வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நைகந்த பகுதி உள்ளிட்ட இடங்களில் வெள்ளநீர் அதிகரித்துள்ளதால் அந்த வீதியில் வாகன போக்குவரத்து இயலாமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஓட்டுநர்களும் பொதுமக்களும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதன்படி, கொழும்பிலிருந்து கட்டுநாயக்க வழியாக குருநாகல் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்த விரும்பும் வாகனங்கள் ஜா-எல மற்றும் மினுவாங்கொட வழியாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், குருநாகல் அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து கொழும்பு நோக்கி வரும் வாகனங்களும் மினுவாங்கொட மற்றும் ஜா-எல வழியாக மாற்று பாதையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கம்பஹா பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மினுவாங்கொட – ஜா-எல மற்றும் சீதுவ வழியாக மாற்று வழியில் பயணிக்குமாறு காவல்துறை ஊடகப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button