செஞ்சரிஅடித்து மாஸ் காட்டிய அவிஷ்க பெர்னாண்டோ; ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணியை வீழ்த்தி இலங்கை ‘ஏ’ அதிரடி வெற்றி!

ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிக்கு எதிரான பலப்பரீட்சையில், இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ (Avishka Fernando) அதிரடியான சதம் (Century) விளாசி மீண்டும் பார்முக்குத் திரும்பியுள்ளார்.
இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 246 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கிப் பதிலளித்துத் துடுப்பெடுத்தாடிய இலங்கை ‘ஏ’ அணிக்கு, ஆரம்பம் முதலே அவிஷ்க பெர்னாண்டோ தூணாக நின்று விளையாடினார்.
அணியின் இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பைத் தன் தோள்களில் சுமந்த அவர், வெறும் 75 பந்துகளில் தனது அதிரடிச் சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.
அவரது நேர்த்தியான டைமிங், மைதானத்தின் நாலாபுறமும் சிதறிய சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் மூலம் ஆட்டத்தை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த இலங்கை ‘ஏ’ அணி, அபார வெற்றியைப் பதிவு செய்தது.
அவிஷ்க பெர்னாண்டோவின் இந்த ‘மாஸ்டர்பீஸ்’ இன்னிங்ஸ் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.




