Sri Lanka News

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போது நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், முன்னாள் ஜனாதிபதி விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button