Sri Lanka News

பிரஜா சக்தி திட்டங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும் நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும்

பிரஜா சக்தி திட்டங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும் சமூக அபிவிருத்தி சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று சனிக்கிழமை (06) சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்தி குழுக்களின் தலைவருமான அபூவக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு 20 பேர் என்ற வகையில் சாய்ந்தமருதில் உள்ள 17 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்தும் பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு இந்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இங்கு ஒவ்வொரு பிரிவிலும் 05 பெண்களும் உள்ளடங்குவர்.

இந்நிகழ்வில், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான், சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா,
சாய்ந்தமருது பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ. வாஹிட், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் உட்பட சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள 17 கிராம சேவகர் பிரிவுகளின் பிரஜாசக்தி தவிசாளர்கள்,செயலாளர்கள், சாய்ந்தமருது சமூக அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button