Sri Lanka NewsWorld News

துருக்கி எல்லைக்குள் திடீரெனப் பாய்ந்த இலங்கையின் முக்கியப் பொருள்!

கடந்த 2025 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இலங்கை ஏற்றுமதி செய்த தேயிலையின் அளவு, 3.3 சதவீத வளர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 2024 ஆண்டு 17.73 மில்லியன் கிலோகிராம் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவு, கடந்த 2025 ஆம் ஆண்டில் 18.32 மில்லியன் கிலோகிராமாக அதிகரித்துள்ளது.

இலங்கையின் தரமான மற்றும் தனித்துவமான தேயிலைக்கு இருக்கும் வலுவான தேவையினால், எதிர்வரும் காலங்களில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிக்கும் என ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கைத் தூதுவர் அருஷா கூரே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அபுதாபி சர்வதேச சந்தையில் , சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டன.

இதன்போது, 2025 ஆம் ஆண்டில் இலங்கை தேயிலை ஏற்றுமதியில், ஈராக் முதலிடத்தையும், ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button