Sri Lanka News

தாழ்நிலப் பகுதி மக்கள் அவதானம்! – இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் உயர்வால் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டன.

இரணைமடுக்குளத்தின் ஆறு வான்கதவுகள் இன்று காலை 9.00 மணிக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

காலநிலை எதிர்வு கூறல் மற்றும் இரணைமடுக்குள நீரேந்து பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சியை கருத்தில் கொண்டு இவ்வாறு ஆறு வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளது.

ஆறு வான்கதவுகளின் இரண்டுவான் கதவுகள் 06 இஞ்சிக்கும் நான்கு வான்கதவுகள் ஒரு இஞ்சிக்கும் திறந்து விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை எதிர்வு கூறல் காணப்படுகின்ற நிலையில் தாழ் நிலப்பகுதியில் உள்ளவர்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Back to top button