Sri Lanka News

2 நாளேயான பெண் சிசு – தனியார் நிலத்தில் சடலமாக மீட்பு

பிறந்து 2 நாட்கள் எனக் கருதப்படும் நிலையில் பெண் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவை மீகஸ்வேவ பள்ளியகொடெல்லா பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) மாலை சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் மீட்கப்பட்டதையடுத்து மீகஸ்வேவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் சுமார் இரண்டு நாட்கள் ஆனதாகக் கருதப்படும் சிசுவின் சடலம் தனியார் நிலத்தில் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கண்டெடுக்கப்பட்ட சடலம் ஒரு பெண் சிசுவின் சடலம் என்பதை விசாரணையில் பொலிஸார் உறுதி செய்தனர்.

சிசுவின் உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய உடற்கூற்றுப் பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மீகஸ்வேவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button