Sri Lanka News
முச்சக்கர வண்டி கட்டணமும் உயர்வு

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
அதன்படி, அதன் புதிய கட்டணம் 110 ரூபாவாக உயரும்.
அதேபோல், இரண்டாவது கிலோ மீட்டருக்காக இதுவரை 85 ரூபாவாக காணப்பட்ட கட்டணத்தை 90 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது




