Sri Lanka News

மேல் மாகாணத்தில் குற்றங்களைக் கட்டுப்படுத்த புதிய ‘வட்ஸ்எப்’ இலக்கம் அறிமுகம்

மேல் மாகாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், அது தொடர்பான தகவல்களைப் பொதுமக்களிடமிருந்து விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கும் புதிய WhatsApp (வட்ஸ்எப்) தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் 24 மணிநேரமும் 0777 128 128 என்ற வட்ஸ்எப் இலக்கம் ஊடாகத் தகவல்களை வழங்க முடியும்.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட செயற்பாட்டு மையத்தின் மூலம் இந்தத் தகவல்கள் கையாளப்படும்.

மேல் மாகாணத்தில் இடம்பெறும் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய சட்டவிரோதச் செயல்கள் தொடர்பான ரகசியத் தகவல்களை வழங்கலாம்.

தகவல் வழங்கும் நபர்களின் ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு முழுமையாகப் பேணப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

மேல் மாகாணத்தைப் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு பொதுமக்கள் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button