Sri Lanka News

கடந்த வருடத்தில் மட்டும் 62 கோடி ரூபா மோசடி; தொடர்ந்தும் ஏமாறும் யாழ்.மக்கள்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வருடம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் ஏனைய மாவட்டங்களைக் காட்டிலும், யாழ்ப்பாணத்திலேயே மோசடிகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன என யாழ்ப்பாணம் பிராந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.பி.எஸ்.ஜெயமகா தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணம் விசேட குற்றவிசாரணைப் பிரிவில் கடந்த வருடம் 225 மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக இடம்பெறும் மோசடிகள், இணையக் குற்றங்கள் ஊடாக இடம்பெறும் மோசடிகள், காணி மோசடிகள், ஒன்லைன் மோசடிகள் என்பனவே அவற்றில் அடங்குகின்றன.

இந்த மோசடிகள் மூலம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளது.

அவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 200 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இத்தகைய மோசடிகள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மைக்காலமாக மீண்டும் அதிகரித்து வருகின்றன.

இலங்கையின் வேறு பகுதிகளைக் காட்டிலும் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவு மோசடிகள் இடம்பெறுகின்றன.

வெளிநாட்டு வாழ்க்கையில் மக்களுக்கு இருக்கும் ஆசையை மோசடியாளர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, இவ்வாறான மோசடியாளர்களிடம் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.- என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button