Sri Lanka News

கம்பளையில் திடீரென தீப்பற்றியெரிந்த முச்சக்கர வண்டி

கம்பளையில் உள்ள பிரதான சாலையின் நவ குருகல பகுதியில் இன்று ஒரு முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி முழுமையாக எரிந்து நாசமானது.

குறித்த முச்சக்கர வண்டி பயணித்துக் கொண்டு இருக்கும் போதே, திடீரென தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

தீ வேகமாக பரவி, குறித்த வண்டி முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளது.

எனினும், அதில் பயணித்திருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button