Sri Lanka News

ஈரானின் முன்னாள் ஜனாதிபதி படுகொலை – அனுதாபம் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஸ!

ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளித்துள்ளதாக, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் இலங்கையின் நெருங்கிய நண்பராக செயற்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

அதன்படி, சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய மேம்பாடு மற்றும் உமா ஓயா பல்நோக்கு திட்டம் ஆகியவற்றை ஆரம்பிப்பதற்கு அவர் முக்கிய பங்காற்றினார் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் குடும்பத்தினருக்கும் மஹிந்த தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்த அவசர நேரத்தில் அனைத்து தரப்பினரும் போரின் பாதையைத் தேர்ந்தெடுப்பதை விட நிதானத்தையும், பேச்சுவார்த்தையையும் கடைப்பிடிக்குமாறு மஹிந்த ராஜபக்ஸ தனது எக்ஸ் தளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button