Sri Lanka News

நிலத் தகராறு – அண்ணன் தாக்கியதில் தம்பி உயிரிழப்பு

எல்பிட்டிய, பதுவன்ஹேன பகுதியில், காணிப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலில் மூத்த சகோதரர் தாக்கியதில் இளைய சகோதரர் உயிரிழந்துள்ளார்.

இன்று (26) குறித்த காணியை அளவீடு செய்வதற்காக நில அளவையாளர்கள் வருகை தந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சகோதரர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த மூத்த சகோதரர், இளைய சகோதரரை தாக்கியுள்ளார்.

தாக்கியதில் படுகாயமடைந்த இளைய சகோதரர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button