Sports

வெற்றியுடன் வெளியேறிய அவுஸ்திரேலியா!

2026 டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 09 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

கண்டி – பல்லேகலயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 16.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களயும் இழந்து 104 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Wasim Ali அதிகபட்சமாக 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Adam Zampa 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதன்படி 105 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 9.4 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணித்தலைவர் Mitchell Marsh ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

எனினும் அவுஸ்திரேலிய அணி சுப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button