கல்முனை சாஹிராவில் சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர 2025(2026) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் (9ஏ, 8ஏ, 7ஏ) பெற்ற 45 மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர் (SLEAS) தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை (SDEC) செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ், பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் (OBA) வைத்தியர் எம்.கே. சனூஸ் காரியப்பர், றிஸ்வான், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை உறுப்பினர் ஆசிரியர் இர்ஸாத் கான், பிரதி்அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது வெளிவந்த 2025 (2026) க.பொ.த சாதாரண தர பரீட்சையில் அதி விசேட சித்திகளைப் பெற்ற 45 மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களுடன் இணைந்து கௌரவிக்கப்பட்டனர்.
அந்தவகையில் (09 ஏ) சித்தி பெற்ற மாணவர்களான என். அப்துல்லாஹ் சப்கி, எம்.கே.எம். கனாஸ், ஏ.எம். ஆபிர் அஹ்ஸாப், ஐ.கே.எம். ஆகில் கான், என்.எம். அன்ஸிப், என்.எம். அக்ஸத், எம்.இஸட்.எம். ஸாபித், ஜே.எம். றஹ்பத் சரோஸ், எம்.ஏ.சிமாஸ் அஹமட், எஸ்.எம்.சாபித், எம்.ஆர்.எம். அஸால், ஜே.அப்தாப் அஹ்மட் மற்றும் (08 ஏ, பி) சித்தி பெற்ற மாணவர்களான எச். அப்துல்லாஹ், எம். டபிள்யூ, சஹ்தி அப்துல்லா, எஸ்.ஏ.எம். ஆபித், எம்.எஸ். அம்னி அஹமட், எம்.எப்.எம். றஸ்தான் பாதில், எம்.என். அர்ஹப் ஹசன், ஏ.ஆர்.ஏ. ஆதில், எம்.ஏ.ஜே. அஹ்ஸப் றுஹைம், ஏ.எஸ். அஹ்மட் சஜாட், எம்.ஆர்.எம். மிர்பாக், என். அகிப், ஏ.எச் அஹ்மத் ஹாதீம், எம்.என்.எம். அபிபி ஹம்தான், எம்.ஜே. அக்கியாஸ் அஹமட், எம்.ஜே.அஹமட் அன்பாஸ், எம்.என். வப்ரி ஷகின், கே. தகி ஹுஸைன், ஏ.ஜீ.எம். றாபித் – (8ஏ, சீ), எம்.எப்.உபைத்துல்லாஹ் – (8ஏ, சீ) மற்றும் (07ஏ, 2பி) சித்தி பெற்ற மாணவர்களான ஏ.ஏ.ஏ. இப்பத் அதீல், ஜே.எம். அஹ்வஜ் சப்கி, எம்.எப்.எம்.சஹ்ல் பிக்ரி, எம்.எம்.எம். நிமி அஷ்ரிம், என்.ஏ.சிமாம், எம்.ஜே.எம். மஹ்ருஸ், ஏ.சுமைல் சஹ்தி, எப்.எம். ஹமித் அம்ஹர் ஆகியோருடன் (07ஏ,பி,சீ) சித்தி பெற்ற மாணவர்களான ஏ.எம். ஸைப் தஹ்மி, எம்.எப்.எம். அல்சாத், எம்.எம். நுஸ்கி, எம்.இஸட்.றிப்பத் அஹமட், எம்.எம். நஸாத், எம்.ஐ.எம். இமாட் – (7ஏ, பி, எஸ்) என மொத்தம் 45 மாணவர்கள் (9ஏ, 8ஏ, 7ஏ) சித்தி பெற்று தான் கற்ற பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை ஈட்டிக் கொடுத்துள்ளனர்.
அதன்படி 9ஏ சித்தி பெற்ற 12 மாணவர்கள், 8ஏ சித்தி பெற்ற 19 மாணவர்கள், 7ஏ சித்தி பெற்ற 14 மாணவர்கள் உட்பட இப்பாடசாலையில் இருந்து இம்முறை 244 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர். அது 83.6 சதவீதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறந்த முன்னேற்றகரமான பெறுபேறுகளைப் பெற அயராது உழைத்த கல்லூரி முதல்வர் எம்.ஐ ஜாபிர் (SLEAS) தலைமையிலான கல்விசார் குழுவினரை பாடசாலை சமூகம் இணைந்து கௌரவித்து வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.




