Sri Lanka News

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் ஆலையடிவேம்பில் விசேட கள நடவடிக்கை

ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று (19) அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்கள் , அரச கட்டிடங்கள் முதலானவற்றில் ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இணைந்து டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் அடையாளப்படுத்தபட்டு சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு தவிசாளர் ஆ.தர்மதாச பிரதித்தவிசாளர் க.ரகுபதி மற்றும் உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்கள்,ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கையின் போது, நுளம்பு பெருகக்கூடிய இடங்களை அகற்றுவதன் அவசியம் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், பொதுமக்களும் தமது சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரித்து டெங்கு ஒழிப்பில் பங்களிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

செல்வி வினாயகமூர்த்தி

Related Articles

Back to top button