Sports

4 – 2 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

23 வது உலகக் கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகிறது. இதில் டலாஸ் மைதானத்தில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு நடைபெற்ற ‘எல்’ பிரிவு போட்டியில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் களம் கண்டன.

விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தின் 12 வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு பெனால்டி கிக் வழங்கப்பட்டது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஹேரி கேன் தனது அணிக்கு கோலை அடித்து அசத்தினார்.

இதன் காரணமாக போட்டியின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பிறகு ஆட்டத்தின் 36 வது நிமிடத்தில் குரோஷியா அணி தனது முதல் கோலை அடித்தது. இதனால் ஆட்டம் 1 – 1 என்ற கணக்கில் சமன் ஆனது.

எனினும், இங்கிலாந்து அணி இந்த நிலையை நீண்ட நேரம் நிலைக்கவிடவில்லை. ஆட்டத்தின் 42 வது நிமிடத்தில் இங்கலாந்து வீரர் டெல்கன் ரைஸ் வழங்கிய அசிஸ்ட்-ஐ சிரியாக பயன்படுத்திக் கொண்ட ஹேரி கன் தனது அணிக்கு கோல் அடித்தார்.

இதனால் மீண்டும் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி 2 – 1 என்ற கண்க்கில் ஆதிக்கம் செலுத்தியது.

எனினும், சற்றும் தொய்வின்றி விளையாடிய குரோஷியா அணி ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் தனது 2 ஆவதி கோலை அடிக்க இரு அணிகளும் 2 – 2 என்ற கணக்கில் புள்ளிகள் சமனுக்கு வந்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் 2 – 2 என்ற கணக்கில் முடிவுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து தொடங்கிய போட்டியின் 2 வது பாதியின் 47 வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி கோல் அடித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 3 – 2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து இரு அணிகளும் வீரர்களை மாற்றி கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தின. ஆட்டத்தின் 85 வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி மற்றொரு கோல் அடிக்க 4 – 2 என்ற கணக்கில் ஆதிக்கத்தை தொடர்ந்தது.

ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 – 2 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் ஹேரி கேன் 2 கோல்களும், ஜூட் பெல்லிங்ஹாம், மார்கஸ் ராஷ்போர்ட் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

Related Articles

Back to top button