Sri Lanka News

இலங்கையின் கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் அலரி மாளிகையில்

இலங்கையின் கல்வித்துறையில் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று ஜூன் 12 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.
கல்வி மறுசீலமைப்பு பற்றிய டிஜிட்டல் செயலணிக் குழு ,கல்வி அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்கெடுத்திருந்தனர்.
பாடசாலைக் கல்வி முறையை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து, டிஜிட்டல் கல்விப் புரட்சியை விரைவுபடுத்துவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button