Sri Lanka News

சுற்றுலாப் பயணிகளிடம் ‘பாம்புகளை வைத்து பணம் சம்பாதித்த 3 பேர் அதிரடி கைது! கொழும்பு காலி முகத்திடலில் சம்பவம்

கொழும்பு காலி முகத்திடல் Galle Face) கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து, மலைப்பாம்புகளுடன் புகைப்படம் எடுக்கச் செய்து பணம் சம்பாதித்து வந்த கும்பலுக்கு வனவிலங்கு அதிகாரிகள் மரண அடி கொடுத்துள்ளனர்!

மாலை நேரத்தில் காலி முகத்திடலுக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், மூன்று நபர்கள் பெரிய மலைப்பாம்புகளை கையில் வைத்துக்கொண்டு சுற்றிக் திரிந்துள்ளனர். பாம்புகளுடன் “தொடர்ந்து போட்டோ, செல்ஃபி” எடுக்க ஆசை காட்டி, அவர்களிடம் இருந்து பெரும் தொகையை சுருட்டி வந்துள்ளனர்.

ஆனால், மக்கள் நடமாட்டம் மிகுந்த, சத்தமான அந்தச் சூழலில், பகல்-இரவாக அந்தப் பாம்புகள் கடுமையான மன அழுத்தத்திற்கும், துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டு வந்ததாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே (28) அன்று வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் 1992 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து துல்லியமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
உடனடியாக களத்தில் குதித்த பெல்லன்வில கொழும்பு மாவட்ட வனவிலங்கு சரணாலயப் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள், காலி முகத்திடலில் அதிரடி “மின்னல் வேக” சோதனையை நடத்தினர்.

இதில் மலைப்பாம்புகளை வைத்திருந்த 3 நபர்களும் கையும் களவுமாக சிக்கினர்! அவர்களிடமிருந்த 3 பெரிய மலைப்பாம்புகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.
!
கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் நேற்று முன்தினம் (29) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதவான் முன்னிலையில் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது..

குறித்த மூவருக்கும் தலா ரூ. 20,000/- வீதம் மொத்தம் ரூ. 60,000/- அபராதம் விதிக்கப்பட்டதுடன் மீட்கப்பட்ட 3 மலைப்பாம்புகளையும் மனித நடமாட்டமில்லாத, அவற்றுக்குப் பொருத்தமான அடர்ந்த இயற்கைச் சூழலில் (காட்டில்) உடனடியாக விடுவிக்க உத்தரவிடப்பட்டது!

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!
“சுற்றுலாத் தலங்களில் விலங்குகளை வைத்து காசு சம்பாதிப்பது மற்றும் வனவிலங்குகளைச் சொந்தமாக வைத்திருப்பது இலங்கச் சட்டப்படி கடுமையான குற்றமாகும்!”

இனிமேல் இதுபோன்ற காட்சிகளைப் பார்த்தால், அவர்களுடன் செல்ஃபி எடுப்பதையோ, பணம் கொடுப்பதையோ தவிருங்கள்! உடனடியாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் 1992 என்ற 24 மணிநேர அவசர இலக்கிற்குத் தகவல் கொடுங்கள்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button