Accident

லொறி விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவி

வீதி ஓரமாக நடந்து சென்ற 11 வயது பள்ளி மாணவி மீது லொறி மோதி உயிரிழந்த சம்பவம் எலபத்த பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

கனதொல – இலுக்தென்ன வீதியில் உள்ள 79ஆம் இலக்க ரப்பர் தோட்டத்திற்கு அருகே, 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவி, இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அலுகெட்டிய பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவியின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எலபத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button