சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி பெற்றுள்ளது.
இன்று (24) இடம்பெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 30 ஓட்டங்களால் தோற்கடித்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இந்த வாய்ப்பை பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது.
அந்த அணி சார்பில் துருவ் ஜூர்ள் 38 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
இந்நிலையில் 206 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
இதனடிப்படையில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தாவின் அடுத்த சுற்றின் வாய்ப்புக்கான எதிர்பார்ப்புக்களை தகர்த்து ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சூப்பர் – 4 சுற்றுக்கான தகுதியைப் பெற்றுள்ளது.
இதன்மூலம் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைஸஸ் ஐதராபாத் மற்றும் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் சூப்பர்- 4 சுற்றுக்கான தகுதியைப் பெற்றுள்ளன.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




