Sri Lanka News

சாமர்த்தியமாக குற்றவாளியைக் கைது செய்த காரைதீவு பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி விருது!


காரைதீவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ரி.றிசோ, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியபோது, நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த பாரிய குற்றச்செயலுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஒருவரை மிகச் சாமர்த்தியமாக கைது செய்திருந்தார்.

​இவரது இந்த துணிச்சலான மற்றும் அர்ப்பணிப்புள்ள சேவையைப் பாராட்டி, கௌரவிக்கும் முகமாக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களினால் விசேட விருதும் வெகுமதியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

​மட்டக்களப்பில் நடைபெற்ற ‘அகன்று செல்’ போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்ட அரங்கில் வைத்து ஜனாதிபதி அவர்களால் இந்த உயரிய அங்கீகாரம் ரி.றிசோவுக்கு வழங்கப்பட்டது. தற்போது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இவருக்கு, சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

​சாதாரண பொலிஸ் உத்தியோகத்தரின் கடமை உணர்வு, நாட்டின் உயரிய மட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டமை ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.

​#SocialTV #Karaitivu #PoliceOfficer #PresidentialAward #AnuraKumaraDissanayake #Batticaloa #SriLankaNews

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button