World News

துருக்கியின் பெருமையைச் சுக்குநூறாக்கிய ஆளில்லா விமானம் !

சூடானில் அரசுப் படைகளுக்கும் (SAF), துணை ராணுவப் படையான விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே நடந்து வரும் கொடூரமான உள்நாட்டுப் போரில் ஒரு புதிய அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சூடான் ஆயுதப் படைகள் பயன்படுத்தி வந்த, துருக்கி தயாரிப்பான அதிநவீன ‘ஹிசார்-ஏ’ (HISAR-A) வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை, தங்களின் ஆளில்லா உளவு விமானம் (Drone) மூலம் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளதாக RSF அதிகாரப்பூர்வ வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

சூடான் நாட்டின் வான்பரப்பைப் பாதுகாப்பதற்காக அந்நாட்டு ராணுவத்தால் இயக்கப்பட்டு வந்த ‘ஹிசார்-ஏ’ ஏவுகணை தளம் இருக்கும் இடத்தை ஆர்.எஸ்.எஃப் (RSF) உளவு ட்ரோன்கள் ரகசியமாகக் கண்டறிந்தன.

அடுத்த சில நொடிகளில் பாய்ந்து வந்த தற்கொலைப்படை ஆளில்லா விமானம், அந்த வான் பாதுகாப்பு அமைப்பின் மீதே நேருக்கு நேர் மோதிப் பயங்கரமாக வெடித்தது.

இதில் அந்தப் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணை அமைப்பு முற்றிலும் சிதைந்து சாம்பலானது.இந்தத் தாக்குதல் வெறும் சூடானோடு நின்றுவிடாமல், சர்வதேச அளவில் துருக்கி நாட்டுக்கு விழுந்த பெரும் இராஜதந்திர மற்றும் ராணுவ அடியாகப் பார்க்கப்படுகிறது:

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button