India NewsSri Lanka News

முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் இதயத்தில் ஏந்திக்கொள்வோம் – தமிழக முதலமைச்சர் விஜய் உருக்கம்!

தமிழ் மக்களின் துயர வரலாற்றை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் இதயத்தில் ஏந்திக்கொள்வோம் என தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 அவர் வெளியிட்டுள்ள விசேட செய்திக்குறிப்பில், ஈழத் தமிழர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் நீதிக்கான போராட்டங்களுக்குத் தமிழக அரசு என்றும் துணை நிற்கும் என உறுதியளித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:”தமிழ் மக்களின் துயர வரலாற்றை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் நம் இதயத்தில் ஏந்திக்கொள்வோம்.

கடல் கடந்து வாழும் தமிழ் சொந்தங்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நீதி கோரிக்கைகளுக்காக எப்போதும் நாம் துணை நிற்போம்.”மேலும், உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களின் உணர்வுகளுடன் தமிழக அரசு எப்போதும் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கும் என்றும், ஈழத் தமிழ் உறவுகளின் வாழ்வுரிமைக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்றும் முதலமைச்சர் விஜய் தனது நினைவேந்தல் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button