India News

தமிழக முதல்வர் விஜய் கேரளா பயணம்?

கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் மே 4 அன்று வெளியானது. இதில், காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 35 இடங்களிலும் மற்றவை மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வென்றுள்ளதால், கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. 10 ஆண்டுகளுக்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததால், அக்கட்சியினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திருந்தது. ஆனாலும், முதல்வர் யார் என்ற கேள்வி அம்மாநிலம் முழுவதும் எழுந்தது.

அதாவது, காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய தலைவரான ரமேஷ் சென்னிதலா, எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன் மற்றும் கே.சி. வேணுகோபால் எம்.பி. ஆகியோர் இடையே முதல்வர்களுக்கான போட்டி நிலவியது. அதனைத் தொடர்ந்து கேரள முதலமைச்சராக வி.டி.சதீசன் தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இத்தகைய சூழலில் தான் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய ஸ்டேடியத்தில் வரும் 18 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

இதனையொட்டி புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள வி.டி. சதீசனின் அறிவுறுத்தலின் பேரில், கேரள அரசின் தலைமைச் செயலாளர் ஜெயதிலக் மூலமாகப் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கேரளாவில் அமையவுள்ள புதிய காங்கிரஸ் அரசின் முதலமைச்சர் வி.டி. சதீசன் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் கேரளாவுக்கு நேரில் செல்லவுள்ளார். அதே சமயம் இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்க உள்ளதால், இந்த நிகழ்வு தென்னிந்திய அரசியல் அரங்கில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பாகவும் பார்க்கப்படுகிறது.  மேலும், ‘இந்தியா’ கூட்டணியின் வலிமையைக் காட்டும் நிகழ்வாகவும் இது  பார்க்கப்படுகிறது.

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ அண்டை மாநிலப் பயணம் இது என்பதால், கேரளாவில் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்போதே பெரும் எதிர்பார்ப்பும.

#SocialTV #CMVijay #VDSatheesan #KeralaElection2026 #TamilNaduPolitics

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button