World News

வெள்ளை மாளிகைக்கு திரும்பிய டிரம்ப்-ரகசிய நகர்வுகள் அம்பலம்!

சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்குத் திரும்பியுள்ளார்.

வந்திறங்கிய உடனே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தச் சீனா பயணம் ஒரு “மாபெரும் வெற்றி” (Grand Success) என்று உற்சாகத்துடன் அறிவித்துள்ளார்.

“நான் சொல்லக்கூடியதெல்லாம் ஒன்றுதான், அது ஒரு மாபெரும் வெற்றி… நாங்கள் மிகச் சிறந்த ஒப்பந்தங்களைச் செய்தோம்.

குறிப்பாகச் சிறந்த வர்த்தக ஒப்பந்தங்களை (Trade Deals) மேற்கொண்டுள்ளோம்,” என டிரம்ப் வெள்ளை மாளிகை முற்றத்தில் முழங்கினார்.

சீனாவில் பல முக்கியமான விஷயங்கள் நடந்திருக்கின்றன, அவற்றைப் பற்றி நீங்கள் விரைவில் ஒவ்வொன்றாகக் கேள்விப்படுவீர்கள் ஆனால் இது ஒரு மகத்தான வெற்றி.

அது உண்மையிலேயே ஒரு வரலாற்றுத் தருணம்,” என்று டிரம்ப் மேலும் கூறினார்.

அமெரிக்கா – சீனா இடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த வர்த்தகப் பதற்றங்களுக்கு (Tariff War) இந்த மாநாட்டில் ஒரு புதிய தீர்வு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

வெனிசுலாவின் 40 டிரில்லியன் டாலர் எண்ணெய் வளத்தை அமெரிக்கா கட்டுப்படுத்துவது மற்றும் உக்ரைனின் தற்காலிக போர் நிறுத்தம் ஆகியவற்றுக்குச் சீனாவிடம் இருந்து டிரம்ப் மறைமுக ஆதரவைப் பெற்றுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன.

டிரம்பின் இந்த “மகா வெற்றி” பிரகடனத்தைத் தொடர்ந்து, சர்வதேசப் பங்குச் சந்தைகள் மற்றும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் சீனாவின் அடுத்தகட்ட கூட்டு அறிவிப்புகளுக்காக உலக நாடுகள் ஆவலுடன் காத்திருக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button