World News

அத்துமீறி நுழைந்த நபரை மோதி தள்ளிய விமானம்-ஓடுபாதையில் கோர விபத்து!

அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் (Denver International Airport), ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் (Frontier Airlines) விமானம் ஒன்று ஓடுபாதையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, அங்கு அத்துமீறி நுழைந்த நபர் மீது மோதிய அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

டென்வரில் இருந்து புறப்படத் தயாராக இருந்த ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானம், ஓடுபாதையில் (Runway) அதிவேகமாக நகர்ந்து கொண்டிருந்தது.

அப்போது, விமான நிலையத்தின் உயர் பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி அத்துமீறி உள்ளே நுழைந்த நபர் ஒருவர், எதிர்பாராத விதமாக விமானத்தின் மீது மோதினார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலையத்தின் கண்காணிப்புக் கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள், தற்போது விசாரணைக் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button