Sri Lanka News

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கான விசேட வர்த்தகப் பண்ட வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்காக விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தகப் பண்ட வரியை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சோளத்திற்கான வரி 50 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தப்பட்ட வரி வீதமானது 2026 மே மாதம் 5 ஆம் திகதி முதல் 2026 டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன், 2025 டிசம்பர் 31 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2469/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் காணப்பட்ட முன்னைய வரி விதிமுறையும் இதனுடன் திருத்தப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 2026 மே மாதம் 04 ஆம் திகதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button