Sri Lanka NewsWorld News

வியட்நாம் ஜனாதிபதி விஜயத்தில் கையொப்பமிடப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் வியட்னாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதி 2026.05.07 மற்றும் 08 ஆம் திகதிகளில் இலங்கைக்கான அரச விஜயமொன்றை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தி, பல துறைகளை உள்ளடக்கியதாக குறித்த அரச விஜயத்தின் போது கீழ்க்காணும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் வியட்னாம் சோசலிச குடியரசின் கலாச்சார, விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கும் இடையில் தகவல் மற்றும் தொடர்பாடல் துறையின் ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

• இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சு மற்றும் வியட்னாம் சோசலிச குடியரசின் கலாச்சார, விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கும் இடையில் கலாச்சார ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

• இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சு மற்றும் வியட்னாம் சோசலிச குடியரசின் இனத்துவ மற்றும் சமய விவகார அமைச்சுக்கும ; இடையில் சமய அபிவிருத்தி, சமய மாணவர் நலனோம்புகை, சமய நம்பிக்கை, சடங்கு சம்பிரதாயங ;கள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

• இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சு மற்றும் வியட்னாம் சோசலிச குடியரசின் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கும் இடையில ; விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப துறைகளில் ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

• இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் இலங்கை தேசிய பொலிஸ் பயிற்சிக் கல்லூரி மற்றும் வியட்னாம் சோசலிச குடியரசின் பொது பொலிஸ் பயிற்சி மற்றும் விஞ்ஞான ரீதியான ஆய்வு ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button