மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்பதாகவும், தி.மு.க. இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என்றும் அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டதாகவும், தங்களது சாதனைகளை முன்வைத்தே வாக்குகள் கேட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிகளையும் தோல்விகளையும் சமமாகக் கருதும் கொள்கை கொண்டவன் என்றும், தி.மு.க.வின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுவரை ஆளுங்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. இனி மக்களின் நலனுக்காகச் சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




