India News

ஸ்டாலின், உதயநிதி உட்பட 34 அமைச்சர்கள் பின்னடைவு

தமிழக சட்டமன்றத் வாக்கெண்ணும் பணிகள் இன்று (4) மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு கடந்த 23-ம் திகதி நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி அதிக தொகுதிகளில் விஜய் தலைமையிலான தவெக முன்னிலைப் பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தில் போட்டியிட்ட விஜய், செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, பிரபு உள்ளிட்டவர்கள் முன்னிலைப் பெற்றுள்ளனர்.

அதேநேரம், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் 31 அமைச்சர்கள் ஆரம்ப கட்டத்தில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

இந்த எதிர்பாராத திருப்பம் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button