சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: 107 தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை! மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பின்னடைவு!

மே 4, தமிழ்நாடு: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பின் நான்கு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளின்படி, தவெக புதுமுக வேட்பாளர்கள் 106 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர்.
வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
இதேபோல், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தவிர திமுகவின் முக்கிய அமைச்சர்களும் பல தொகுதிகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். தவெகவின் புதுமுக வேட்பாளர்கள் பல இடங்களில் முன்னிலை பெற்று, அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுவரை வெளியாகிக்கொண்டிருக்கும் முன்னிலை முடிவுகளின்படி ஆளும் திமுக மூன்றாமிடத்துக்கு பின் தள்ளப்பட்டிருக்கிறது.
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், முழுமையான முடிவுகள் வெளியாகும்போது அரசியல் சூழ்நிலை மாற வாய்ப்புள்ளது.




