Sri Lanka News

அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் ஜேர்மன் பயணம்.!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் இரு வார கால விஜயம் மேற்கொண்டு இன்று ஜேர்மன் பயணமாகிறார்.ஜேர்மனில் இடம்பெறவுள்ள Workshop on Connective Cities Deep Dive on Water Resilience Municipalities எனும் பயிற்சி செயலமர்வில் பங்குபற்றுவதற்காகவே அவர் அங்கு செல்கிறார்.

இந்த செயலமர்வில் ஜேர்மன் நாட்டிலுள்ள 03 மாநகர சபைகளினதும் மேலும் 05 நாடுகளில் இருந்து தலா ஒரு மாநகர சபை என்ற ரீதியிலும் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் இரு வார காலத்திற்கான முழுமையான புலமைப் பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதுடன் அக்கரைப்பற்று மாநகர சபையின் பொறியியலாளர் ஹனீப் மொகமட் அவர்கள் முதல் ஒரு வார கால உத்தியோகபூர்வ செயலமர்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும், இந்த செயலமர்வைத் தொடர்ந்து சுவிஸ்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஒரு வார காலம் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பையும் ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் கடந்த காலங்களில் ஜப்பான், சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button