Sri Lanka News

பேருந்து கட்டண மோசடி: முறைப்பாடளிக்க காவல்துறை விசேட அறிவிப்பு

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்குமாறு காவல்துறையின் ஊடகப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்து நடத்துனர்கள் அல்லது உரிமையாளர்களுக்கு எதிராக தொடர்பாக 118 அல்லது 119 ஆகிய அவசர அழைப்பு இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம்.

அல்லது அருகிலுள்ள காவல்நிலையத்திற்குச் சென்று வாய்மொழி மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ முறைப்பாடளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button