Sports

ஐபிஎல் 2026 வான்கடே மைதானத்தில் சஞ்சு சாம்சனின் அதிரடி சதம்

​மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 தொடரின் 33-வது லீக் போட்டியில், பலப்பரிட்சை நடத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு தொடக்கத்திலேயே அதிரடி காத்திருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் ஆரம்பம் முதலே மும்பை பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார்.

​சஞ்சு சாம்சன் வெறும் 54 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 22 ரன்களும், டிவால்ட் ப்ரீவிஸ் 21 ரன்களும் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

மும்பை அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா ஓரளவிற்கு கட்டுக்கோப்பாகப் பந்துவீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
​தற்போது 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி தனது இன்னிங்ஸை விளையாடத் தயாராகி வருகிறது.

வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், மும்பை அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் இந்த இலக்கை எட்ட கடுமையாகப் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புள்ளிப்பட்டியலில் முன்னேற இந்த வெற்றி இரு அணிகளுக்கும் மிக அவசியமானதாகப் பார்க்கப்படுகிறது.

SocialTv #IPL2026 #SanjuSamson

CSKvMI

Wankhede

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button