மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 30ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அஹ்மதாபாத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது.
துடுப்பாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் திலக் வர்மா அதிகபட்சமாக 101 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில் 200 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 100 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.




