News

அக்ஷய திருதியையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,787 டொலராகக் உள்ளதுடன்,ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 79 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.

அக்ஷய திருதியை நாளான இன்றையதினம் தங்கம் இந்த விலைகளில் விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button