Sports

AFC Champions League Elite: கத்தார், சவுதி, ஜப்பான் மற்றும் மலேசிய அணிகள் மோதும் காலிறுதிப் போட்டிகள்!

ஜெத்தா: ஆசியாவின் மிகப்பாரிய கால்பந்து தொடரான ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் எலைட் (AFC Champions League Elite) தொடரின் காலிறுதிப் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஆரம்பமாகவுள்ளன.

வெளியிடப்பட்டுள்ள போட்டி அட்டவணையின்படி, காலிறுதிப் போட்டிகளின் விபரங்கள் வருமாறு:

போட்டி அட்டவணை:
ஏப்ரல் 16 (வியாழக்கிழமை):

அல் சாட் SC (Al Sadd SC) vs விசெல் கோபி (Vissel Kobe)

நேரம்: இரவு 19:15

மைதானம்: இளவரசர் அப்துல்லாஹ் அல் பைசல் விளையாட்டு மைதானம்.

ஏப்ரல் 17 (வெள்ளிக்கிழமை):

அல் அஹ்லி SFC (Al Ahli SFC) vs ஜோஹூர் தருல் தாஜிம் (Johor Darul Ta’zim)

நேரம்: மாலை 17:45

மைதானம்: கிங் அப்துல்லாஹ் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானம்.

ஏப்ரல் 17 (வெள்ளிக்கிழமை):

எஃப்சி மச்சிடா செல்வியா (FC Machida Zelvia) vs அல் இத்திஹாத் (Al Ittihad)

நேரம்: இரவு 21:00

மைதானம்: இளவரசர் அப்துல்லாஹ் அல் பைசல் விளையாட்டு மைதானம்.

ஏப்ரல் 18 (சனிக்கிழமை):

புரிராம் யுனைடெட் (Buriram United) vs ஷபாப் அல் அஹ்லி (Shabab Al Ahli)

நேரம்: இரவு 19:15

மைதானம்: இளவரசர் அப்துல்லாஹ் அல் பைசல் விளையாட்டு மைதானம்.

(குறிப்பு: அனைத்து நேரங்களும் சவுதி அரேபிய உள்ளூர் நேரப்படி குறிப்பிடப்பட்டுள்ளன)

ஆசியாவின் முன்னணி கழகங்கள் மோதும் இந்தத் தொடரின் காலிறுதிப் போட்டிகள் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கத்தார், சவுதி அரேபியா, ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் பலம்வாய்ந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவதற்காக களம் காணவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button